பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

297

பாணன் கையது தோலே, காண்வரக் கடுந் தெற்று மூடையின் ............... வாடிய மாலை மலைந்த சென்னியன்; வேந்து தொழில் அயரும் அருந் தலைச் சுற்றமொடு நெடு நகர் வந்தென, விடு கணை மொசித்த மூரி வெண் தோல் ................. சேறுபடு குருதிச் செம்மலுக்கோஓ மாறு படு நெடு வேல் மார்பு உளம் போக, நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே, அது கண்டு, பரந்தோர் எல்லாம் - புகழத் தலை பணிந்து இறைஞ்சியோனே, குருசில், பிணங்கு கதிர் அலமருங் கழனித் தண்ணடை ஒழிய, இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் கரம்பைச் சீறுர் நல்கினன் எனவே.

திணை - வாகை துறை ......... முல்லை,

அரிசில் கிழார் பாடியது.

286. ஒளவையார்

வெள்ளாட்டுக் கிடாய்கள் போல் வரிசையாக வீரர்கள் பலர்

இருக்க அவர்களை விட்டுவிட்டு இவனுக்கு மட்டும் நாட்டு அரசன் தனித்துச் சிறப்பித்துக் கள் அளித்தான். அதுதான் ஒரு வீரனைக்

காலில்லாத கட்டில் ஆகிய பாடையில் கிடத்தி வெள்ளை ஆடையை மேலே போர்த்திச்சிறப்புச்செய்வதற்குக்காரணம் ஆவது;

தன் தலைவனுக்காக வீர மரணம் அடைவது பெருமை தருவது; அதனை இன்னும் அவன் அடையாமல் இருப்பது வருத்தத்தைத் தருகிறது.

வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத் தன் ஓர் அன்ன இளையர் இருப்பப், பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக் கால் கழி கட்டிலில் கிடப்பித், து வெள் அறுவை போர்ப்பித்திலதே!

திணை - கரந்தை துறை - வேத்தியல், ஒளவையார் பாடியது.