பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



படை வீரர்களைக் கொண்டும், யானைகளை ஏவியும் நீ எதிர்க்கும் பகைவர்தம் மதிலைக் கடந்து வெற்றிகள் கொண்டு அவ்வூர்களில் இருந்து கொணரும் நல் ஆபரணங்களைப் பரிசிலர்க்குத் தந்து சிறப்புச் செய்க. -

நின் குடை கோயில் வலம் வரும் சிவனுக்குத் தாழ்வதாக; ஆசி கூறும் அந்தணரை வணங்குக; நாடு சுடு புகையால் நின் தலைமாலை வாடுவதாக ஊடற்கண் மகளிர்பால் உன் வெகுளி அடங்குவதாக.

வெற்றி பெற்று உயர்வுடன் விளங்கும் நீ தண்கதிர் மதியம் போலவும், ஒண் சுடர் ஞாயிறு போலவும் நிலமிசை நீடுவாழ்க.

வடாஅது பனி படு நெடு வரை வடக்கும், தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும், குணா.அது கரை பொரு தொடு கடற் குணக்கும், குடாஅது தொன்று முதிர் பெளவத்தின் குடக்கும், கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது ஆனிலை உலகத்தானும், ஆனாது, உருவும் புகழும் ஆகி, விரி சீர்த் தெரிகோல் ளுமன்ன் போல, ஒரு திறம் பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க! செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடல் படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச் சிறு கண் யானை செவ்விதின் ஏவிப் பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து, அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம் பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப் பணியியர் அத்தை, நின் குடையே - முனிவர் முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே! இறைஞ்சுக, பெரும! நின் சென்னி - சிறந்த நான்மறை முனிவர் எந்து கை எதிரே! வாடுக, இறைவ! நின் கண்ணி - ஒன்னார் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே! செலியர் அத்தை, நின் வெகுளி - வால் இழை மங்கையர் துணித்த வாள் முகத்து எதிரே!