பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

31

ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடங்கிய தண்டா ஈகைத் தகை மாண் குடுமி! தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர் ஒண் கதிர் ஞாயிறு போலவும், மன்னிய, பெரும! நீ நிலமிசையானே!

திணையும் துறையும் அவை துறை வாழ்த்தியலும் ஆம். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.

7. சோழன் கரிகால் பெருவளத்தான்

நீ படை எடுத்துப் பகைவர்தம் நாடுகளை அழிக்கிறாய்; உன்

யானைகளும் போர் வீரர்களும் திறமையாகப் போர் செய்

கின்றனர். பகைவர்தம் ஊர்கள் கொளுத்தப்படுகின்றன. அங்கு

உள்ள பொருள்களைக் கொணர்ந்து குவிக்கிறாய்.

மீனைக் கொண்டே வெள்ளத்தை அடைக்கும் சிறப்பு

உடைய நீர்வளம் மிக்க நாடுகள் அவை, நீ போர் செய்து தாக்கு

வதால் அவை அழிவு பெறுகின்றன; நன்மைகளை இழக்கின்றன!

களிறு கடைஇய தாள்,

கழல் உரீஇய திருந்து அடி, கணை பொருது கவி வண் கையால், கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து, மா மறுத்த மலர் மார்பின், தோல் பெயரிய எறுழ் முன்பின், எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக் கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல இல்ல ஆகுபவால் - இயல் தேர் வளவ! தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து மீனின் செறுக்கும் யாணர்ப் பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே

திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை, மழபுல வஞ்சியும் ஆம் சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.