பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



8. சேரமான் கடுங்கோ வாழியாதன்

பரப்புமிக்க ஆட்சியும், ஈகையும், பேரரசும், ஊக்கமும் மிக்கவன் எம் அரசன் சேரலாதன். அரசர்கள் அவனைப் பணிந்து வழிமொழிகின்றனர். சிறப்பு மிக்க இவனுக்குச் சூரியனே! நீ நிகர்

ஆகமாட்டாய்!

பொழுது என்ற வரையறை உனக்கு உள்ளது; நிலை யில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறாய்; தெற்கும் வடக்குமாக இடம் மாறுகிறாய்; மலையில் மறைந்து ஒளிகிறாய்; அகன்ற ஆகாயம் உன்இடம்; அது பெருமைக்கு உரியது என்றாலும் நீ பகலில் மட்டும்தான் வெளிவர முடிகிறது.

வையம் காவலர் வழி மொழிந்து ஒழுகப் போகம் வேண்டிப் பொதுச் சொல் பொறாஅது. இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக், கடந்து அடு தானைச் சேரலாதனை யாங்கனம் ஒத்தியோ? - வீங்கு செலல் மண்டிலம்: பொழுது என வரைதி, புறக்கொடுத்து இறத்தி, மாறி வருதி, மலை மறைந்து ஒளித்தி, அகல் இரு விசும்பினானும் பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே.

திணை - பாடாண் திணை, துறை - இயன்மொழி, பூவை நிலையும் ஆம், சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.

9. பாண்டியன் பல்யாக சாலை

முதுகுடுமிப் பெருவழுதி

‘பசு, பார்ப்பனர், பெண்கள், பிணியாளர், மகவு பெறாதவர் ஆகிய நீவிர் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுங்கள். விரைவில் எம் அம்பை விடப்போகிறோம்’ என்று முன் அறிவிப்புச் செய்துவிட்டுப் போர் தொடுக்கும் அறக்கோட்பாடு உன்பால் உளளது.