பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

33


மறத்திலும் அறம் பிழையாமல் நடத்து கொள்ளும் சிறப்பு

உன்பால் உள்ளது.

பசும்பொன் கூத்தர்க்கு வழங்கி விழா எடுத்த நெடியோன் என்பான் உன் முன்னோன். அவன் தோற்றுவித்த பஃறுளி ஆற்று மணலினும் பல ஆண்டுகள் வாழ்வாயாக.

“ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின் என, அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் எம் கோ, வாழிய, குடுமி - தம் கோச் செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!

திணையும் துறையும் அவை, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

10. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி

நீ வழக்குகளை விசாரிக்கும்போது வேண்டியவர்கள் கூறுகிறார்கள் என்பதால் நல்லவர்கள் என்று யாரையும் தீர் மானித்து விடுவது இல்லை. அதேபோல ஒருவரைப் பழித்துக் கூறுவதால் அவர்கள் குற்றவாளிகள் என்று முடிவு செய்வதில்லை.

குற்றவாளிகளா இல்லையா என்பதை நீயே நன்கு ஆராய்ந்து தெளிகிறாய்.

அவர்கள் குற்றம் செய்தவர்கள் என்றுபட்டால் அதற்கு உரிய தண்டனையைத் தயங்காமல் வழங்குகிறாய்.

குற்றம் செய்தவர்கள் தவறுகளை உணர்ந்து பொறுத்துக் கொள்ள வேண்டினால் உரிய தண்டனையைச் சற்றுக் குறைத்துக் கொள்ளவும் செய்கிறாய்.