பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



உன்னை நாடி வருகின்றவர்க்கு வயிறு ஆரச் சுவைமிக்க உணவைத் தந்து அவர்களை மகிழ வைக்கும் கொடைப் பண்பு உன்பால் உள்ளது.

மகளிர் தழுவ உன் மார்பு இடம் கொடுக்கும்; பகைவர் தாக்க நீ இடம் தரமாட்டாய். தவறு செய்துவிட்டுப் பின் வருத்தப் பட்டுப் பயனில்லை. எதையும் தீர ஆராய்ந்து செயல்படும் திறன் உன்பால் உள்ளது.

நெய்தலங்கானல் என்னும் ஊருக்கு உரிய தலைவனே! உன்னைப் பல படி ஏத்துவோம் யாம்.

வழிபடுவோரை வல் அறிதீயே: பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே; நீ மெய் கண்ட தீமை காணின், ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி, வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதேஅமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில் வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப! செய்து இரங்கா வினைச் சேண் விளங்கும் புகழ், நெய்தலங்கானல் நெடியோய்!எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!

திணையும் துறையும் அவை. சோழன் நெய்தலங்கானல் இளஞ் சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

11. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ

இள மங்கையர்கள் மணல் பாவைக்குப் பூச்சூட்டி விளை யாடி அதன்பின் பொருநை நதியில் பாய்ந்து நீராடி மகிழ்வர். அத்தகைய பொருநை நதி பாயும் வஞ்சிக்குப் பேரரசன் நீ!

பகைவர்தம் அரண் கடந்து அவர்களைப் புறம் கண்டு வெற்றிகள் பல பெற்றுப் புகழ்படைக்கிறாய்.