பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


369. சேரமான் கடல் ஒட்டிய வேல்கெழுகுட்டவன்

நீ வாளேர் உழவன், யானைகள் மேகமாகவும், நீ ஏந்திய வாள் மின்னலாகவும், உன் முரசு முழக்கம் இடிஒலியாகவும், குதிரைகள் வீசும் காற்றாகவும், அம்புகள் மழையாகவும் பொழிகின்றன.

குருதி படிந்த களத்தில் பேய்கள் பிணங்களைப் பிடித்துத் தின்கின்றன. பூதங்கள் இப்பிணங்களைக் காக்கின்றன.

இது நீ செய்யும் மறக்கள வேள்வி; நீ சந்திக்கும் போர்க்களம் உனக்கு ஏர்க்களம் ஆகிறது; தேர் ஏர் ஆகிறது; இத்தகைய கள வேள்வி செய்யும் உன்னைத் தடாரிப் பறை கொண்டு யாம் பாட வந்துள்ளோம்.

இமயம்போல் தோற்றம் அளிக்கும் பெருங்கை யானை களையும், துடிபோன்ற அடியினையுடைய கன்றுகளோடு கூடிய பிடிகளையும் எமக்கு அளித்துச் சிறப்புச் செய்வாயாக! உன்னை வாழ்த்துகிறோம்.

இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின், கருங் கை யானை கொண்மூ ஆக, நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த வாள் மின் ஆக வயங்கு கடிப்பு அமைந்த குருதிப் பலிய முரசு முழக்கு ஆக, அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின், வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக, விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை, ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக, விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின் செருப் படை மிளிர்ந்த திருத்தறு பைஞ் சால், பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி, விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ். பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்ப்பு, கண நரியோடு கழுது களம் படுப்பப், பூதம் காப்பப் பொலிகளம் தழீஇப், பாடுநர்க்கு இருந்த பீடுடையாளர்