பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

367 தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி வேய்வை காணா விருந்தின் போர்வை அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றிப், பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று எழிலி தோயும் இமிழ் இசை அருவி, பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன ஒடை நுதல, ஒல்குதல் அறியாத், துடி அடிக் குழவிய பிடி அடி மிடைந்த வேழ முகவை நல்குமதிதாழா ஈகைத் தகை வெய்யோயே!

திணையும் துறையும் அவை துறை - ஏர்க்கள உருவகமும் ஆம் சேரமான் கடல் ஒட்டிய வேல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.

370. சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி

ஈகைமிக்க வள்ளல்களைக் காணாமல் பசியால் வாடும்

சுற்றத்தினரை அழைத்துக் கொண்டு காடும் மேடும் திரிந்து பழுமரம் நாடும் பறவைகளைப் போல உன்னைத் தேடி வந்திருக்கிறோம்.

நீ களத்தில் பகைவர்களைக் கொன்று குவித்த பிணங்கள்

பெருகிக் குவிந்து விட்டன. பேய்களும், கழுகுகளும், பருந்துகளும் அவற்றைச்சுற்றி வட்டமிடுகின்றன.

உன்போர்க் களத்தை ஏர்க்களமாக உருவகித்து யாம் தடாரிப்

பறை கொண்டு பாடி நிற்கிறோம்.

மலை போன்ற யானைகளைப் பரிசிலாக முகந்து செல்ல

யாம் வந்துள்ளோம்.

வள்ளியோர்க் காணாது உய்திறன் உள்ளி, நாரும் போழும் செய்து ஊன் பெறா அது பசி தினத் திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து, அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல், உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின்