பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண், கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை, வரி மரல் திரங்கிய கானம் பிற்படப், பழுமரம் உள்ளிய பறவை போல, ஒண் படை மாரி வீழ் கனி பெய்தெனத். துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப, விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்துப், படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி, எருது களிறு ஆக, வாள் மடல் ஒச்சி, அதரி திரித்த ஆள் உகு கடாவின், அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, வெந் திறல் வியன் களம் பொலிக!’ என்று ஏத்தி, இருப்பு முகம் செறித்த ஏந்துஎழில் மருப்பின் வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும! வடி வநில் எஃகம் பாய்ந்தென, கிடந்த தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார் இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி, அழு குரற் பேய்மகள் அயர, கழுகொடு செஞ் செவி எருவை திரிதரும், அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! திணையும் துறையும் அவை, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடை யார் பாடியது.

371. தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன்

எமக்குப் பொருள் அளிக்கும் அருளாளரைக் காணப் பெறாமல் பசியோடு வேப்ப மரத்து நிழலில் தங்கினோம். அதன் பூக்கள் எங்கள் மீது சொரிந்தன; அவற்றால் எமக்கு என்ன பயன்? அந்த நிழல் எம் பசியைப் போக்காது. அரிசி கிடைத்தால் எம் பசியைப் போக்கிக் கொள்ள முடியும். எமக்குப் பொருள் அளித்து வாழ வைக்கும் வள்ளல்களை நாடிப் புறப்பட்டேன்.

எம் இசைக் கருவிகளை ஒரு பையில் போட்டுக் கொண்டு மற்றொரு பையில் அடுகலங்களை அடுக்கி வைத்துக் கொண்