பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

ரா.சீ. 369

டோம். இரண்டையும் ஒரு காவடியில் வைத்துச் சுமந்து அரிய வழிகள் கடந்து நீ பொரும் போர்க் களத்தை வந்து சேர்ந்துள்ளோம்.

எம் தடாரிப் பறைகொண்டு உம் போர்க்கள வெற்றிகளை ஏர்க்களமாகப் பாடுகிறோம். பேய்கள் பிணம் தின்னப் பல வீரர்களைக் குவித்தாய். அவற்றை அவை தின்ன அளித்தாய். நீ பல்லாண்டு வாழ்க எனப் பேய்களும் வாழ்த்துகின்றன. -

குருதி படிந்த களத்தில் பகைவர்களை உழக்கி வெற்றி கொண்ட வேந்தனே! யாம் விரும்பும் பரிசில் நீ தரும் யானைகள். அவற்றைப் பெற்றுச் செல்வோம் யாம்; வாழ்க!.

அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது, மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகிப், போது அவிழ் அலரி நாரின் தொடுத்துத், தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப், பறையொடு தகைத்த கலப்பையென், முரவு வாய் ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி, மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்பக், குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன், அரிசி இன்மையின் ஆர் இடை நீந்திக், கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப, வரு கணை வாளி. அன்பு இன்று தலைஇ இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளிக், குறைத் தலைப் படு பிணன் எதிரப் போர்பு அழித்து. யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி அதரி திரத்த ஆள் உகு கடாவின், மதியத்து அன்ன என் விசி உறு தடாரி அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின், பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை, புகர்முக முகவைக்கு வந்திசின் - பெரும! களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி, விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள், குடர்த் தலை மாலை சூடி, உணத் தின ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து வயங்கு பல் மீனினும் வாழியர், பல என,