பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



உரு கெழு பேய்மகள் அயரக், குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே!

திணையும் துறையும் அவை, தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

372. தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன்

யாம் தடாரிப் பண் ஒற்றிப் பாட வந்தது எதற்காக?

நீ செய்த களவேள்வி அதனைச் சிறப்பித்துப் பாடி நீ தரும் ஒளிமிக்க பொன் மாலையைப் பெறுவதற்காகவே.

நீ வலம்பட வீசும் வாள் மின்னலாகவும்; அம்புகள் மழை யாகவும் அமைந்த பாசறை; அதில் பிணங்களின் தலைகள் அடுப் பாகக் கூவிளம் விறகு கொண்டு பேய்கள் பற்ற வைக்கும். அதில் வரிக்குடல்கள் மிதக்கும் மண்டை ஒட்டை அகப்பையாகவும், வன்னி மரத்தின் கொம்பு அதில் சொருகப் பட்ட காம்பாக வும் பேய் மகள் துழந்து அட்ட இறைச்சி உணவினைப் பேய் மடையன் கொற்றவைக்குப் படைக்கிறான். இத்தகு களவேள்வி படைக்கக் காரணமாக இருந்தவன் நீ உன் களப்போரைச் சிறப்பித்து யாம் பாடுகிறோம்.

நின் ஒளி பெற்ற மாலையைப் பெற நயந்து யாம் பாமாலை பாடுகிறோம்.

விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி, ஏத்தி வந்தது எல்லாம் - முழுத்த இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி, கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை, பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின், கூவிள விறகின் ஆக்கு வரி துடுப்பின், ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின், ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த, ‘வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க எனப்