பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

371



புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின் நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே.

திணை - வாகை துறை மறக்கள வேள்வி.

அவனை மாங்குடி கிழார் பாடியது.

373. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய

கிள்ளிவளவன்

முரசுகள் இடி என முழங்கவும் களிறுகள் மேகம் போல் திரளவும், தேரும் குதிரைகளும் மழைத்துளிபோல் சிதறி விழவும், அம்புகள் காற்றெனச் செல்லவும் பெருஞ்சேனையுடன் சென்று கொங்கருடன் பொருதாய்; அவர்கள் புறங்கொடுத்து ஓடினர்.

இவ்வாறே வஞ்சி முற்றம் போர்க் களனாக மாற அதனைக் கைப்பற்றினாய்.

எம் முன்னவர்கள் பேரரசர்கள் செய்யும் போரினை அக்களங் களுக்குச் சென்று பாடினர் என்று கேட்டு இருக்கிறேன். அவ்வாறே தக்க வேந்தரைத் தேட நினக்கு நிகராக யாரும் எனக்கு அகப் படாமையால் உன்னை நாடி வந்துள்ளேன்.

அதனால் கிள்ளி வளவனே! நீ அடையும் வெற்றிகளைக் களத்தில் வந்து உன்னைக் கண்டு யாம் பாடத் தொடங்குகிறோம்.

பகைவர் மதிலை வென்று அவர்பால் கொண்ட பொருள் களைப் பரிசிலாகப் பெற யாம் வந்துள்ளோம்.

உருமிசை முழக்கு என முரசம் இசைப்பச் செரு நவில் வேழம் கொண்மூ ஆகத், தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக் கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, மைந்தர் ஆடிய மங்கு பெருந் தானைக், கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே!