பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

37



எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின், மறலி அன்ன களிற்று மிசையோனே, களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், பல் மீன் நாப்பண் திங்கள் போலவும், சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப, மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே: நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! பழன மஞ்ஞை உகுத்த பீலி கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும், கொழு மீன், விளைந்த கள்ளின், விழு நீர் வேலி நாடு கிழவோனே.

திணை - பாடாண் திணை, துறை - வாழ்த்தியல்.

சோழன் முடித் தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு, சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.

14. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்

யானைகளைப் போர்க்களத்தில் இழுத்துப் பிடித்து அவற்றை அடக்கிச் செலுத்தவும், குதிரைகள் குழிகளில் விழுந்து சறுக்காமல் சமப்படுத்தவும், அம்புகளை ஏவிப் பகைவர்கள் மீது செலுத்தவும், பரிசிலர்க்கு அரிய ஆபரணங்களைத் தரவும் உன் கைகள் வலிமை கொள்ள வேண்டி உள்ளது. காய்ப்புப் பெறு கின்றன. அதனால் வலிய ஆகின்றன.

யாம் நீ தரும் ஊனும், கறியும், துவையலும் கலந்த சோறு உண்பதல்லது வேறு பிறதொழில் செய்வது அறியோம். இதுவே யாம் செய்யும் கடின உழைப்பு: அதனால் எம் கைகள் மெலிந்து உள்ளன. பாடுவார் கை மென்மை உடையது; அதற்குக் காரணம் இது.

கடுங் கண்ண கொல் களிற்றால்

காப்பு உடைய எழு முருக்கிப்

பொன் இயல் புனை தோட்டியால்

முன்பு துரந்து, சமம் தாங்கவும்: