பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



பார் உடைத்த குண்டு அகழி நீர் அழுவம் நிவப்புக் குறித்து, நிமிர் பரிய மா தாங்கவும்: ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச் சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்: பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்! வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை. புலவு நாற்றத்த பைந் தடி பூ நாற்றத்த புகை கொளிஇ, ஊன் துவை கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது, பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும் மெல்லிய - பெரும! - தாமே, நல்லவர்க்கு ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு இரு நிலத்து அன்ன நோன்மைச், செரு மிகு சேஎய்! - நின் பாடுநர் கையே.

திணை - அது துறை - இயன்மொழி.

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, மெல்லியவாமால் தும் கை எனக் கபிலர் பாடியது.

15. பாண்டியன் பல்யாக சாலை

முதுகுடுமிப் பெருவழுதி

தேர் கொண்டு குழிபட்ட தெருக்களில் கழுதை ஏர் பூட்டி உன் பகைவர் நாட்டைப் பாழ் செய்தனை.

தேர்களைச் செலுத்திக் கழனிகளை அழித்தனை; களிறுகள் கொண்டு குளங்களைக் கலக்கினாய்.

உன் பகைவர்கள் உன்னிடம் தோற்று ஓடினர். இவ்வாறு நீ வெற்றி கொண்ட களங்கள் பலவாகும்.

ஊரின்கண் மறையவரைத் துணையாகக் கொண்டு வேள்விகள் நடத்தினை; அவற்றின் நினைவாகத் தூண்களும் எழுப்பி உள்ளாய்.