பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



384. கரும்பனூர் கிழான்

நன்செய் நிலமாகிய மருத வயற்கண் தன் இனத்துடன் மீன்களை மேய்ந்து வஞ்சி மரத்தின் கிளையில் நாரை உறங்கும்; முற்றிய கரும்பின் பூக்களைக் கடித்துத் தின்னும்.

புன்செய் நிலமாகிய முல்லை நிலத்தில் வரகின் அடிப்பகுதியில் எலிகள் பதுங்கி இருக்க அவற்றைக் குறும்பூழ்ப் பறவை பிடிக்கத் தாவும்; அதனால் முயல் அஞ்சிச் சிதறி ஒட அருகில் உள்ள இருப்பைப் பூ உதிர்கின்றது.

விழாக்கள் எதுவும் இல்லையாயினும் உழவர்தம் உண் கலத்தில் கெடிற்று மீனாகிய உணவும், இனிய கள்ளும் நிறைந்து கிடக்கும். அத்தகைய வளம்மிக்க கரும்பனூரரின் கிணைஞர் யாம்.

நெல் என்ன பொன் என்ன பருகும் கள் என்ன அவை என்னிடம் குறையும்போது அவன் அவை தந்து நிரப்ப்வான்.

நிணம் மிக்க கொழும் சோற்றினோடு நீர் நாண நெய் வழங்குவான். உலகம் அவனைப் புகழும்படி ஈகை மிக்கவன்.

அவன் என்னைப் போற்றிக் காத்தான். அவன் இருக்கும் வரை யாம் இழப்பது யாதும் இல்லை; குறைவில்லாத வாழ்க்கை எமது.

அன்னோனைப் புரவலனாக யான் பெற்று உள்ளேன். அவன் இருக்கும் வரை வெள்ளி நிலை மாறினாலும் எந்த வறட்சியும் என்னை மருளச் செய்யாது.

உண்ணாது சென்ற நாட்கள் பல; அவை சென்று கழிந்து விட்டன. இன்று கொழுவிய உணவு உண்டு மகிழ்ந்து வாழும் நாட்கள் அமைந்து விட்டன.

மென்பாலான் உடன் அணைஇ, வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை அறைக் கரும்பின் பூ அருந்தும்; வன்பாலான் கருங் கால் வரகின் அரிகால் கருப்பை அலைக்கும் பூழின்

அம் கிண் குறு முயல் வெருவ, அயல கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து,