பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

387



விழவு இன்றாயினும், உழவர் மண்டை இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து கரும்பன் ஊரன் கிணையேம், பெரும! நெல் என்னா, பொன் என்னா, கனற்றக் கொண்ட நறவு என்னா, மனை மன்னா, அவை பலவும் யான் தண்டவும், தான் தண்டான், நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, மண் நாணப் புகழ் வேட்டு, நீர் நாண நெய் வழங்கிப், புரந்தோன் எந்தை யாம் எவன்தொலைவதை அன்னோனை உடையேம் என்ப; இனி வறட்கு யாண்டு நிற்க வெள்ளி, மாண்தக உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும், தின்ற நண் பல் ஊன் தோண்டவும், வந்த வைகல் அல்லது, சென்ற எல்லைச் செலவு அறியேனே.

திணையும் துறையும் அவை, கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

385. அம்பர் கிழான் அருவந்தை

வெள்ளி முளைத்தது; பறவைகள் ஆர்த்தன; விடியல் புலர்ந்தது.

பாடுவது என் தொழில்; பிறர் கடைவாயில் நாடுவது வழக்கம். எருதினை வாழ்த்தி அவன் கடைவாயில் நின்றது இல்லை. எங்கோ யாரையோ பாடிக் கொண்டிருந்தேன்.

அது அறிந்தான்; என்னைத் தெரிந்தான்; என் வறுமையைக் களைந்தான்.

என் தடாரிப்பறை கேட்டு யான் இருக்கும் இடம் தேடி வந்து என் கந்தல் ஆடையை மாற்றிக் கவின் மிக்க புதிய ஆடை தந்து உடுத்திக் கொள்ளச் செய்தான். என் பசியைக் களைந்தான்.

காவிரி பாயும் நெல் விளையும் கழனிகளை உடைய அம்பர் என்னும் ஊருக்குத் தலைவன். அருவந்தை அவன் வாழ்க வேங்க.