பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



மலையில் விழும் மழைத்துளியினும் பல ஆண்டுகள்

வாழ்வானாக!

வெள்ளி தோன்றப், புள்ளுக் குரல் இயம்பப், புலரி விடியல் பகடு பல வாழ்த்தித், தன் கடைத் தோன்றினும் இலனே பிறன் கடை, அகன்கண் தடாரிப் பாடக் கேட்டருளி, வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை நிலம் தினச் சிதைந்த சிதாஅர் களைந்து, வெளியது உடீஇ என் பசி களைந்தோனே, காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை நெல் விளை கழனி அம்பர் கிழவோன், நல் அருவந்தை, வாழியர்!-புல்லிய வேங்கட விறல் வரைப் பட்ட

ஓங்கல் வானத்து உறையினும் பலவே!

திணை - அது துறை - வாழ்த்தியல்.

அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.

386.சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய

கிள்ளி வளவன்

சுடச்சுட வறுவலையும், சூட்டிறைச்சியையும், பசுவின் பாலையும் உண்ணத் தருவான். சூடாக உண்டதனால் வியர்வை துளிக்குமே அன்றி உழைத்து வியர்வை கண்டது இல்லை. வேண்டிய அளவு உண்ணத் தருவான். இது அவன் ஈகைச்சிறப்பு.

நெல் வயலுக்குக் கரும்பு வேலியைாக அமைய எங்கும் நீர்ப் பூக்கள் பூத்துக் கிடக்கும் மருத வளம் மிக்கது.

புல்வெளி உடைய முல்லை நிலம் பசுக்களும் அவற்றை மேய்வாரும் நிரம்பிக் கிடக்கும். மற்றும் அங்கு வில் ஏந்திய வீரரும்

காவல் காப்பர்.

கடலில் வரும் கலன்களை எண்ணுவோர்கடற்கரையில் உள்ள புன்னைக் கிளைகளை அசைத்து விளையாடிக் கொண்டிருப்பர்.