பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

389



உப்பங்கழிகளில் உப்பு வாணிபம் செய்வோர் அவற்றை மலை நாட்டுக்குக் கொண்டு செல்வர். அத்தகைய உமணர் பேரொலி ஒலித்துக் கொண்டிருக்கும். அத்தகைய வளம் மிக்க நல்ல நாட்டுப் பொருநர் யாம்.

போர் செய்பவரையும் பொருநர் என்று கூறுவர்; நாங்கள் போர்க்களம் காணாத பொருநர்கள்.

வெள்ளி திசைகள் மாறலாம்; அது கிழக்கில் இருந்து மேற்கே செல்லலாம்; மேற்கே இருந்து கிழக்கு செல்லலாம்; வடக்கிலிருந்து தெற்கே செல்லலாம்; தெற்கிலேயே நிலைத்து நிற்கலாம். இதனால் நன்மை தீமைகள் உள்ளன என்று கணித்துக் கூறுவோர் உளர். அதைப் பற்றி யான் கவலைப்படத் தேவையில்லை. எனக்கு வாழ்வும் வளமும் அளிக்க என் தலைவன் உளன். அவன் நீடுழி வாழ்வானாக.

நெடு நீர நிறை கயத்துப் படு மாரித் துளி போல, நெய் துள்ளிய வறை முகக்கவும், சூடு கிழித்து வாடுஊன் மிசையவும், ஊன் கொண்ட வெண் மண்டை ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக; வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின; புறவே, புல் அருந்து பல் ஆயத்தான், வில் இருந்த வெங் குறும்பின்று; கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர் கானற் புன்னைச் சினை நிலைக்குந்து: கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றிப், பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து: அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே; பொரா அப் பொருநரேம்; குண திசை நின்று குடமுதல் செலினும், குட திசை நின்று குணமுதல் செலினும்,