பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



வட திசை நின்று தென்வயின் செலினும், தென் திசை நின்று குறுகாது நீடினும், யாண்டும் நிற்க, வெள்ளி; யாம் வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே!

திணையும் துறையும் அவை. சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.

387. சேரமான் சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன்

வயல்ஆமையின் வெண்மையான வயிறு போன்ற மாக்கிணை இயக்கி அவன் வெற்றியையும், அவன் தரும் ஈகையையும் சிறப் பித்துப் பாடுவேன் ஆயின் பாடுகின்ற என் தகுதியை நோக்காமல் தன் தகுதி நோக்கி, யானை, தேர், குதிரை, பசுக்கள், கழனிகள் இவற்றைத் தந்து சிறப்பிக்கின்றான்.

இவற்றைக் காணும்போது இவை கனவோ நனவோ என்று வியப்புத் தோன்றுகிறது. செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று அவன் பெயரைக் கூறினாலே அவன் பகைவரும் எனக்கு வழி

விடுகின்றனர்.

வஞ்சியின் புறமதில் அலைக்கும் பொருநை மணலினும், அது பாயும் கழனிகளில் விளையும் நெல்லினும் பல ஆண்டுகள்

வாழ்வானாக.

வள் உகிர வயல் ஆமை வெள் அகடு கண்டன்ன, வீங்கு விசிப் புதுப் போர்வைத் தெண் கண் மாக் கினை இயக்கி, என்றும் மாறு கொண்டோர் மதில் இடறி, நீறு ஆடிய நறுங் கவுள. பூம் பொறிப் பணை எருத்தின, வேறு வேறு பரந்து இயங்கி, வேந்துடை மிளை அயல் பரக்கும் ஏந்து கோட்டு இரும் பினர்த் தடக்கை, திருந்து தொழில் பல பகடு