பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

391

பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின் நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி, மிகப் பொலியர், தன் சேவடி அத்தை’ என்று, யான் இசைப்பின், நனி நன்று எனாப், பல பிற வாழ்த்த இருந்தோர் தன்கோன். மருவ இன் நகர் அகன் கடைத் தலைத் திருந்து கழற் சேவடி குறுகல் வேண்டி, வென்று இரங்கும் விறல் முரசினோன், என் சிறுமையின், இழித்து நோக்கான், தன் பெருமையின் தகவு நோக்கிக், குன்று உறழ்ந்த களிறு என்கோ? கொய் உளைய மா என்கோ? மன்று நிறையும் நிரை என்கோ? மனைக் களமரொடு களம் என்கோ? ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின் நல்கியோனே, நசைசால் தோன்றல், ஊழி வாழி, பூழியர் பெரு மகன்! பினர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண் விடுவர் மாதோ நெடிதே-நில்லாப் புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும் கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் பல் ஊர் சுற்றிய கழனி எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.

திணையும் துறையும் அவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோவாழியாதனைக் குண்டுகட்

பாலியாதனார் பாடியது.

388. சிறுகுடி கிழான் பண்ணன்

வெள்ளியாகிய நட்சத்திரம் தென் புலத்தில் தங்க அதனால்

விளைவு குறைந்து வாடிய காலத்தில் சிறுகுடி என்னும் சிற்றுாரின் தலைவன் பண்ணனை அடைந்து கிணைமகன் ஒருவன் தன் நிலையை எடுத்துரைத்தனன் ஆக அந்நிலையே அவன் இடுக் கண்கள் அவனை விட்டு நீங்கத் தன்னிடம் உள்ள பொருள்களைத்