பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



தந்தவன். புலவர்கள் பாடும் புகழ் உடையவன் அவன். இத்தகைய பண்ணனின் சிறப்புகளை யான் கூற கடமைப்பட்டுள்ளேன்.

பண்ணனுக்கு உடைமையாகிய உழுதொழில் செய்யும் எருதுகளையும் எருமைகளையும் யான் பாடேன் ஆயின் நன்றி கொன்றவன் ஆவேன்; பாண்டியன் நன்மதிப்பை இழக்கும் இழிவினை என் சுற்றத்தினர் பெற்றவர் ஆகட்டும். அவன் அவர்களுக்கு அருள் செய்யாதவன் ஆகுக.

வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல், பள்ளம், வாடிய பயன் இல் காலை, இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர் சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித், தன் நிலை அறியுநனாக, அந் நிலை, இடுக்கண் இரியல் போக, உடைய கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தொன்றல், நுண்ணுல் தடக்கையின் ஆனாமருப்பாக, வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளை நிலம் பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, அவன், வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா, நாள்தொறும் பாடேன்.ஆயின், ஆனா மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன், பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை அண்ணல் யானை வழுதி, கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே!

திணை - அது துறை - இயன்மொழி. சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.

389. நல்லேர் முதியன்

கோடை நீடுகிறது; ஓடை வறன் உறுகிறது. நீரை உடைய நுங்கு கல்லாகிறது; காடுகளில் வேப்பங்காய் உலர்கின்றது; கயங்கள் களியாகச் சேறுபடுகின்றன.

இத்தகைய கோடைக் காலத்திலும், வெள்ளி தெற்கே சென்றாலும் பொருள் நிலை குறையுமாயின் எம்மை நினைக்க: வருக என்று கூறி வேண்டியது அளித்தான் ஆதனுங்கன்.