பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

393


இன்றே சென்று காண வேண்டும் என்று புறப்பட்டால் அவனை எளிதில் அடைந்து அவனைச் சேர முடியாது; நெடும்

பயணம் தேவைப்பட்டது.

சென்று விட்டாலோ குன்று அனைய செல்வம் தந்து சிறப்பிப்பான்; எளிதில் அவனைக் காண இயலும்; எதுவும் பெறலாம்.

பகைவன் நாட்டில் தாய் யானைகள் வருந்தக் கன்றுகளைப் பிடித்து வந்து மன்றுகளில் கட்டி வைக்கும் சிறப்பு உடையவன்; குன்றுகள் மிக்க வேங்கட நாடன் ஆவான்!

அத்தகைய உன் முன்னோன் ஆதனங்கன் போல் நெஞ்சு உரனும் எழில் நலமும் உடைய முதியனே நீ எம் பசி தீர்த்து நின் கலங்கள் தந்து சிறப்பிப்பாயாக; உம் மனைவி, மக்கள் பொலிவுடன் திகழ்வாராக சாப்பறை உன் வீட்டு அறைமுன் என்றும் கேளாது ஒழிவதாக!

‘நீர் நுங்கின் கண் வலிப்பக், கான வேம்பின் காய் திரங்கக், கயம் களியும் கோடைஆயினும், ஏலா வெண்பொன் போகுறு காலை, எம்மும் உள்ளுமோ பிள்ளை.அம் பொருந! என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை; இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன், செலினே, காணா வழியனும் அல்லன்; புன் தலை மடப் பிடி இணைய, கன்று தந்து, குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும் கல் இழி அருவி வேங்கடம் கிழவோன், செல்வழி எழாஅ நல் ஏர் முதியன்! ஆதனுங்கன் போல, நீயும் பசித்த ஒக்கல் பழங்கண் வீட, வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும! ஐது அகல் அல்குல் மகளிர் நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே!

திணையும் துறையும் அவை, நல்லேர் முதியனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.