பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


390. அதியமான் நெடுமான் அஞ்சி

அற நெஞ்சினர் ஆகிய ஆயர்களும், மற வாழ்க்கையர் ஆகிய சிறு குடியினரும் செருந்திமிக்க மன்றத்தில் விழவு அயர்வர்.

ஆரவாரம் மிக்க அம்மன்றம் போன்றது அதியமான் நெடுமுற்றம். எப்பொழுதும் கலகலப்பாக உள்ளது. ஆர்வலர் வர இயலுமே அல்லாமல் பிற நாட்டுக் காவலர்கள் அணுகுதற்கு இயலாதது. கனவிலும் அங்கே புகமுடியும் என்று அவர்கள் கருதமுடியாது.

அந்த அரண்மனையின் மாடங்களில் எதிர் ஒலிக்கப் பல நாள் சென்று பாடவில்லை; ஒரே ஒரு நாள் என் தடாரிப்பறை ஒலித்துப் பாடி நின்றேன். உடனே அவன் வந்து என்னை நாடி எனக்குப் புத்தாடை தந்து புதுப்பித்தான். பாசி அன்ன உடையைக் களைந்து பகன்றைப் பூப் போன்ற புதிய வெள்ளிய ஆடை தந்தான்.

மகிழ்ச்சி தரக் கள் தந்தான். பசீ தீர்க்க அமுதமான சுவைமிக்க உணவு தந்தான்; வெள்ளி வெண்கலத்தில் பெய்து தந்தான்; மற்றும் என் சுற்றத்தினருக்குச் செந்நெல் குவியல் தந்து அவர்களை வளமுடையவர்கள் ஆக்கினான்.

மழையைப் போல வாரி வழங்கும் வள்ளல் அதியமான் என்பதைப் பலர் அறியாது இருக்கின்றனர். வறுமையால் வாடுபவர் அவன் பெருமையை அறியாதவராக உள்ளனர். அவ்வாய்ப்பை அவர்கள் பெறாமல் இருக்கின்றனர்.

அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் மறவை நெஞ்சத்து ஆயிலாளர், அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ், விழவுஅணி வியன் களம் அன்ன முற்றத்து, ஆர்வலர் குறுகின் அல்லது. காவலர் கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர், மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என் அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் பாடி நின்ற பல் நாள் அன்றியும், சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் வந்ததற்கொண்டு, ‘நெடுங் கடை நின்ற