பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

395



புன் தலைப் பொருநன் அளியன்தான் எனத் தன்னுழைக் குறுகல் வேண்டி என் அரை முது நீர்ப் பாசி அன்ன உடை சுளைந்து, திரு மலர் அன்ன புது மடிக் கொளி.இ. மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்,

அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி, முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற, அகடு நனை வேங்கை வீ கண்டன்ன பகடு தரு செந்நெல் போரொடு நல்கிக், ‘கொண்டி பெறுக! என்றோனே - உண் துறை மலை அலர் அணியும் தலை நீர் நாடன், கண்டாற்கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி,

வான் அறியல என்பர்அடு பசி போக்கல்; அண்ணல் யானை வேந்தர் உண்மையோ, அறியலர் காண்பு அறியலரே!

திணையும் துறையும் அவை, அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

391. பொறையாற்றுக் கிழான்

நெல் வளம்மிக்குத் திகழ்ந்த நாடு வேங்கடம்; அங்கு ஊனும் சோறும் கலந்த உணவும், கள்ளும் அவ்வூரன் தரப் பெற்று உண்டு மகிழ்ந்தோம். அது வற்கடம் உற்றதால் பிற தடம் தேடும் முயற்சியில் உள்ளோம்.

எம் சுற்றத்தினரோடு உன்னை நாடி இங்கு வந்துள்ளோம். ‘முன்னம் வந்தவர்; அளியர்; கிணைப்பொருநர் என்று எங்கள்பால் இரக்கம் காட்டி உன்பால் எங்களை அறிமுகம் செய்தனர். அதனால் உன்னைக் காண வந்திருக்கிறேன்.

கழியில் உள்ள மீனை அருந்தப் புதா என்னும் பறவை வந்து தங்கும் வளம்மிக்க ஊர் உனது.