பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


நீ நின் நேயம் மிக்க காதலியுடன் இன்துயில் பெறுக;

இன்புற்று வாழ்க. உன் ஊரிலுள்ள வயல்கள் வேலி ஆயிரம்

விளைக இவையே எம் வாழ்த்துகள்.

தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் விண்டு அனைய விண் தோய் பிறங்கல் முகடு உயர்ந்த நெல்லின் மகிழ் வரப் பகடு தரு பெரு வளம் வாழ்த்திப், பெற்ற திருந்தா மூரி பரந்து படக் கெண்டி, அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென, ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி நனந்தலை மூதூர் வினவலின், ‘முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும் அளியன் ஆகலின், பொருநன் இவன் என, நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற, காண்கு வந்திசின், பெரும! மாண்டக இருநீர் பெருங் சுழி நுழைமீன் அருந்தும் துதைந்த தூவி அம் புதா அம் சேக்கும் ததைந்த புனல் நின் வெய்யோளொடு, இன் துயில் பெறுகதில் நீயே வளஞ்சால் துளி பதன் அறிந்து பொழிய, வேலி ஆயிரம் விளைக நின் வயலே!

திணை - அது துறை - கடைநிலை.

பொறையாற்று கிழானைக் கல்லாடானார் பாடியது.

392. அதியமான் பொகுட்டு எழினி

அதியர்கோன் மகன் பொகுட்டு எழினி அவன் வீட்டுக் கடைவாயிலில் விடியற்காலையில் நின்று தடாரிப் பறை கொண்டு அவன் வெற்றிச் சிறப்புகளைப் பாடினேன் வாளேர் உழவனே வாழ்க’ என்று ஏத்திப் பாடினேன்.

அங்கு நின்றிருந்த என் வியர்வை நனைந்த பாசி வேர் போன்ற கிழிச்சல் ஆடையை நீக்கி அழகிய கரை இட்ட