பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

397


ஆடையைத் தந்து அணியச் செய்தான். தேள் கடுப்புப் போன்ற நாள்பட்டுப் புளித்த கள்ளையும், பொன் கலத்தில் உணவும் தந்து எம்மைச் சிறப்பித்தான்.

கடல் கடந்த நாட்டில் இருந்து தேவர் தம் அமுதலம் போன்று இனிக்கும் கரும்பினைக் கொண்டு தந்த முன்னோர்கள் வழி வந்த தலைவ்ன் அவன் வாழ்க!

மதி ஏர் வெண் குடை அதியர் கோமான், கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான் பசலை நிலவின் பணி படு விடியல், பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ, ‘உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து, நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து அணங்குடை மரபின் இருங் களந்தோறும், வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் வைகல் உழவ! வாழிய பெரிது!’ எனச் சென்று யான் நின்றனெனாக, அன்றே, ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி வேர் புரை சிதா அர் நீக்கி, நேர் கரை நுண் நூல் கலிங்கம் உடீஇ, உண்ம் எனத் தேட் கடுப்பு அன்ன நாட்படு தேறல் கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ. ஊண்முறை ஈத்தல் அன்றியும், கோள்முறை விருந்து இறை நல்கியோனே-அந்தரத்து அரும் பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே.

திணையும் துறையும் அவை, அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.

393. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ‘பசி என்பது அறியாத வளமான வாழ்க்கையள்; பழகியவள்; இளையள்; என் வாழ்க்கைத் துணைவி. வறுமையால் அவள் அறிவும் மழுங்கி விட்டது.