பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



உழவர் தம் வீட்டுப் படிகள் ஏறிப் பல படப் பாடினும் பரிசு ஏதும் பெறாமல் திரும்பி வந்ததுதான் மிச்சம்.

உலர்ந்து கிடக்கும் பாத்திரம் மறுபடியும் மலர்ந்து விளங்க வழி யாது? ஈவோர் யார் என்று வினவிப் பல நாடுகளும் சுற்றித் திரிந்து இறுதியில் அது நீதான் என்று அறிந்தேன்.

எம்.சுற்றத்தவர்உண்டு பலநாள்ஆயின. அவர்கள் கைநனைத்து உண்டது மறந்து விட்டது. அவர்களுக்குப் பஞ்சுபோன்ற நிணங்கலந்த ஊன் சோறு நல்குக.

அரவின் குட்டி பிறந்து வெளி வருகிறது; அதன் நாவைப் போலச் சிதர்ந்து கிடக்கும் கிழிச்சல் ஆடை, அதனைக் கழித்து விட்டுப் பகன்றை மலர் போன்ற பட்டு உடை தருக. மிக்க செல்வமும் உன்பால் உள்ளது. எனக்கு உதவுக.

மாரி பொய்த்தாலும் வாரி குன்றாத கவின் மிக்க காவரி பாயும் நாடன் நீ. வளவனே நீ வாழ்க எனப் பாடுவோம் யாம்.

பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் குறு நெடுந் துணையொடு கூர்மை வீதலின், குடி முறை பாடி, ஒய்யென வருந்தி, அடல் நசை மறந்த வெங் குழிசி மலர்க்கும் கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின், “வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?’ என, உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா, உலகம் எல்லாம் ஒருபால் பட்டென, மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி, ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் கூர்ந்த எவ்வம் விடக், கொழு நிணம் கிழிப்பக், கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன, வெண் நிண மூரி அருள, நாள் உற ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என் தொன்று படு சிதா அர் துவர நீக்கி, போது விரி பகன்றைப் புது மலர் அன்ன, அகன்று மடி கலிங்கம் உடீஇச், செல்வமும்,