பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

399



கேடு இன்று நல்குமதி, பெரும மாசு இல் மதி புரை மாக் கினை தெளிர்ப்பு ஒற்றி, ஆடுமகள் ஒல்கல் ஒப்ப வாடி, கோடை ஆயினும், கோடா ஒழுக்கத்துக் காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந: வாய் வாள் வளவன்! வாழ்க!” எனப் பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே.

திணையும் துறையும் அவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நல்லிறையனார் பாடியது.

394. சோழிய ஏனாதி திருக்குட்டுவன்

சேரன் குட்டுவன் அவன் வள்ளியன் என்று வாய்மொழிப் புலவர்கள் புகழ்ந்து கூறுவர். அதைக் கேட்டு அவனை நினைத்துக் கொண்டு அவனிடம் செல்வதைப் பற்றிச் சிறிது சிந்திப்பீராக!

யானும் அவன் பேரிசை கேட்டு விடியற்பொழுது என் தடாரிப் பறை கொண்டு இசைத்து அவன் தந்தையின் புகழைப் பாடி நின்றேன். வஞ்சித் துறையில் அவன் விஞ்சிய வெற்றிகளைப் பாடினேன். அது கேட்டு மகிழ்வுடன் என்னை அணுகிச் சிறப்புச் செய்ய வேண்டிப் போர்க் களிறு ஒன்று பரிசிலாகத் தந்தான்.

சினமும் களிப்பும் மிக்க அது நமக்குப் பொருந்தாது என்று அதனை மறுக்க அவன் அது சிறிது என்று யான் நினைத்ததாகக் கருதி மேலும் பெருங்களிறு ஒன்றனைக் கொண்டு வந்து நிறுத்தினான்.

போதும் இந்த அனுபவம்; இனி என் சுற்றம் வறுமையில் மிக்கு உழன்றாலும் குன்றுகள் மிக்க நாடுடையவனை உள்ளுவது இனி இல்லை என்று உறுதி கொண்டு உள்ளேன்.

சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின், ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன், வலி துஞ்சு தடக் கை வ்ாய் வாட் குட்டுவன், வள்ளியன் ஆதல் வையகம் புகழினும், உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்! யானும், இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை,