பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



ஒரு கண் மாக் கினை தெளிர்ப்ப ஒற்றி, பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினேனாக, அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டிக், கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின் வெஞ் சின வேழம் நல்கினன், அஞ்சி யான் அது பெயர்த்தனெனாகத் தான் அது சிறிது என உணர்ந்தமை நாணிப், பிறிதும் ஓர் பெருங் களிறு நல்கியோனே, அதற்கொண்டு, இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும், “துன் அரும் பரிசில் தரும் என, என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே

திணையும் துறையும் அவை,

சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

395. சோழ நாட்டுப்பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன்

உழவர்கள் தம் மருத நிலத்தை விட்டு முல்லை நிலத்துக்குச் சென்று தம் எருதுகளை மேய விடுவர். அங்குக் குறுமுயலின் இறைச்சியையும், வாளை மீன் அவியலையும் பழஞ்சோற்றோடு உண்பர்; பின்பு புதரிடை மலர்ந்த தளவமுல்லையைத் தலையில் சூடிக் கொள்வர் கிணைப் பறை கொண்டு கதிர்களை மேயவரும் பறவைகளை ஒட்டுவர்; சோற்றினின்று வடித்து எடுக்கப்பட்ட கள்ளைக் குடித்து மகிழ்வர்.

மனையில் வாழும் கோழி குரல் எழுப்பினால் காட்டுக் கோழியும் நீர்க் கோழியும் குரல் கொடுக்கும். மகளிர் புனத்தில் படியும் கிளிகளை ஒட்டக் குரல் எழுப்பச் சேற்று நிலத்தில் உள்ள பறவைகள் பறந்து ஒடுகின்றன.

இத்தகைய நல்வளங்கள் மிக்க ஊர்தித்தனின் உறந்தை சோழ நாட்டில் உள்ளது. அதன் கிழக்கே உள்ள வேண்மான் என்பானுக்கு உரிய பிடவூரில் உள்ள சாத்தன் என்பான் அவனைப் பாடும் கிணைஞர் யாம்.