பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

ரா.சீ. 401

தடாரிப் பறை கொண்டு அவன் கடைநிலை நின்ற என்னைக் கண்டதுதான் தாமதம், சொற்கள் அதிகம் பேசிற்றிலன்; அருங்கலம் தந்தான்; அதோடு நின்றான் இல்லை.

என்னைத் தன் மனைவி.பால் அறிமுகம் செய்து என்னையும் தன்னைப்போல் மதிக்க போற்றுக’ என்று கூறினான்.

என்னையும் அவன் குடும்பத்துள் ஒருவனாக வைத்துப் போற்றினான். அதனை யான் எப்படி மறப்பது? அவன் ஆதரவு எனக்குக் கிடைத்து விட்டது. அவனைத்தான் நினைப்பேன்; மற்றவரை மறப்பேன்.

ஞாலம் வெப்பம் பெரிது அடைந்தாலும், வானத்தில் எரி தோன்றினாலும், குளமீனும் அதில் உள்ள மலர்த் தாள்களும் புகை கொண்டாலும், கொக்கின் நகம் போலும் நெல்லின் சோறும் பொறிக் கறியும் கொழுவிய இறைச்சியும் உண்டு மகிழும்படி “விளைவு பெருகுக என்று யான் வாழ்த்துவேன்; மற்றும் எதைத் தருவது? எதைத் தரக் கூடாது என்று பேதம் பாராமல் எதையும் ஈயும் இயல்பினன்; அவன் முயற்சிகள் வெல்க! வாழ்க என்றும் வாழ்த்துவேன்.

மென் புலத்து வயல் உழவர்

வன் புலத்துப் பகடு விட்டுக்,

குறு முயலின் குழைச் சூட்டொடு

நெடு வாளைப் பல் உவியல்,

பழஞ் சோற்றுப் புகவு அருந்திப்

புதல் தளவின் பூச் சூடி,

அரிப் பறையால் புள்ளோப்பி

அவிழ் நெல்லின் அரியலாருந்து:

மனைக் கோழிப் பைம் பயிரின்னே,

கானக் கோழிக் கவர் குரலொடு

நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து:

வேய் அன்ன மென் தோளால்,

மயில் அன்ன மென் சாயலார்,

கிளி கடியின்னே,

அகல் அள்ளல் புள் இரீஇயுந்து:

ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும்

சீர் சான்ற விழுச் சிறப்பின்,

சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்