பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



செல்லா நல் இசை உறந்தைக் குணாது, நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்திக், கதிர் நனி சென்ற கனையிருள் மாலைத் தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், έώ (57ου ...................... கின் அரிக்குரல் தடாரியொடு, ஆங்கு நின்ற எற்கண்டு, சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, ஐயென உரைத்தன்றி நல்கித், தன் மனைப் பொன் போல் மடந்தையைக் காட்டி, ‘இவனை என்போல் போற்று என்றோனே, அதற்கொண்டு, அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே! அகன் ஞாலம் பெரிதும் வெம்பினும், மிக வானுள் எரி தோன்றினும், குள மீனொடும் தாள் புகையினும், பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் பசுங் கண் கருணைச் சூட்டொடு மாந்தி, ‘விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!” என, உள்ளதும் இல்லதும் அறியாது. ஆங்கு அமைந்தன்றால், வாழ்க, அவன் தாளே!

திணையும் துறையும் அவை. சோழ நாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.

396. வ ாட்டாற்று எழினியாதன்

நீரின் கீழ் மீன்கள் திரிகின்றன; நீரின்மேல் மலர்கள் பூக்கின்றன; கழனிகளில் பறையில் எழுப்பும் ஒலி பறவைகளை ஒட்டுகின்றது; கோசர் குரவை ஆடி மகிழ்வர்; அத்தகைய சிறப்பு உடையது வாட்டாறு எனும் அவனது ஊர்.

மெலிந்தவர்க்கு அவன் வலிமை சேர்த்தான். உறவினர் இல்லாதவர்க்கு உற்ற துணைவனாக விளங்கினான். வாட்டாற்றுத் தலைவன் எழினியாதனின் கிணைப் பொருநர் ஆவோம்.