பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

403


ஆட்டிறைச்சி, கள், குறுமுயலின் இறைச்சியோடு நெய் கலந்த சோறு இவற்றைத் தந்து உபசரித்துப் பின் வேண்டுமளவு வாரி எடுத்துக் கொள்ளத் திறந்து வைத்துள்ள உணவுப் பொருள்கள் இவற்றுக்கு எல்லையே இல்லை; முகந்து எடுத்துக் கொள்ளத் திறந்து வைத்துள்ளான். எங்களுக்கு அவன் தந்த ஆக்கம் அதற்கு எல்லையே இல்லை; அத்தகைய வள்ளியோன் அவன்.

அவன் மீன்கள் சூழும் வானத்துத் திங்கள் போல ஒளி பெறுவானாக. அவன் புகழ் அமைந்த வளன் எமக்கு ஈயப் பயன்படுவதாக.

கீழ் நீரான் மீன் வழங்குந்து, மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து கழி சுற்றிய விளை கழனி, அரிப் பறையான் புள் ஒப்புந்து, நெடுநீர் கூஉம் மணல் தண் கான் மென் பறையான் புள் இரியுந்து நனைக் கள்ளின் மனைக் கோசர் தீம் தேறல் நறவு மகிழ்ந்து, தீம் குரவைக் கொளைத் தாங்குந்து உள் இலோர்க்கு வலி ஆகுவன், கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன், கழுமிய வென் வேல் வேளே, வள நீர் வாட்டாற்று எழினியாதன்: கிணையேம், பெரும! கொழுந் தடிய சூடு என்கோ? வள நனையின் மட்டு என்கோ? குறு முயலின் நிணம் பெய்தந்த நறுநெய்ய சோறு என்கோ? திறந்து மறந்த கூட்டுமுதல் முகந்து கொள்ளும் உணவு என்கோ?

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 6 (6 6 (I66T66 6

--- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - வருந்திய இரும் பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை எண்மோர் ஆக்கக் கங்குண்டே, மாரி வானத்த மீன் நாப்பண்,