பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



விரி கதிர வெண் திங்களின், விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல் இசை யாமும் பிறரும் வாழ்த்த நாளும் நிரைசால் நன் கலன் நல்கி, உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே!

திணையும் துறையும் அவை. வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.

397.சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

வெள்ளி முளைக்கும் காலைப் பொழுது பறவைகள் காட்டைவிட்டு வெளியேறுகின்றன. பொய்கைகளில் மலர்கள் பூத்துப் பொலிவு தருகின்றன. வானத்தில் சந்திரன் ஒளி குறைகிறது. இத்தகைய விடியற் பொழுதில் துயில் எழுக’ என்று துயில் எழுச்சி பாடத் தடாரியை ஒலித்து அவன் கடை வாயிலில் நிற்கின்றேன்.

தன்னை நாடி வந்த பரிசிலன் யான் என்று அறிந்து வரவேற்று நெய்யில் வறுத்த இறைச்சியும், மணம் மிக்க கள்ளும், பாம்பு உரித்தது போன்ற உடையும் தந்து மழை போல வாரி வழங்கினான்.

வேனில் அன்ன என் துன்பம் நீக்கி அரிய ஆபரணங்கள் பல தந்துள்ளான். வயலில் பூத்த தாமரை அந்தணர் எழுப்பும் வேள்வித் தீ போல் நிறம் தந்து விளங்கும் நாட்டினை உடையவனாகிய வள வன் எம் துணைவன்; அதனால் ஊழிக் காலத்தில் கடல் கொந்தளித்தாலும் கதிரவன் தெற்கே முளைத்தாலும் யாம் என்ன ஏது என்று கேட்டு அஞ்சுவது இல்லை.

வெள்ளியும் இரு விசும்பு ஏர் தரும் புள்ளும் உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே: பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச் சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி,