பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

405

எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை, வைகறை அரவம் கேளியர்! பல கோள் செய் தார் மார்ப எழுமதி துயில் எனத் தெண் கண் மாக் கினை தெளிர்ப்ப ஒற்றி, நெடுங் கடைத் தோன்றியேனே, அது நயந்து, ‘உள்ளி வந்த பரிசிலன் இவன் என, நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு, மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல், பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு, மாரி அன்ன வண்மையின் சொரிந்து, வேனில் அன்ன என் வெப்பு நீங்க, அருங் கலம் நல்கியோனே என்றும், செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை, அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள் வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்; எறி திரைப் பெருங் கடல் இறுதிக் கண் செலினும், தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும், ‘என்? என்று அஞ்சலம், யாமே வென் வேல் அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன் திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே.

திணை - அது துறை - பரிசில்விடை கடைநிலை விடையும் ஆம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டுர்த்தாயங்கண்ணனார்

பாடியது.

398. சேரமான் வஞ்சன்

சந்திரன் மறைய வெள்ளி முளைத்தது. பொழுது விடிந்தது:

கோழி குரல் கூவியது.

பொய்கையில் பூக்கள் மலர்ந்தன. பாணர் தம் யாழ் கொண்டு

இசை கூட்டினர். பொழுது புலர்ந்தது.

சேர அரசன் வஞ்சன் அவன் இருக்கைக்குத் தருக்கு மிக்க

பகைவர் செல்ல இயலாது. நகைக்க வைக்கும் பாணர்களும், பாவலர்களும் எளிதில் செல்ல இயன்றது.