பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


யானும் என் தடாரிப் பறை கொண்டு அவன் புகழைப் பாடி நின்றனன். ‘என் வறுமை தீர நல்குக’ என்று இரந்து கேட்க அவன் நயந்து என்னை வரவேற்று என் அரையில் உடுத்தியிருந்த கிழிந்த ஆடையை மாற்றி அவன் உடுத்தி இருந்த புகை விரித்தது போன்ற ஆடையைத் தந்து பாத்திரத்தில் நிழலைக் காணத் தக்க கள்ளை யான் உண்ண உதவி அருளினான்.

அருவி இசைத்து ஒலிக்கும் பாயல் என்னும் மலைக்குத் தலைவன் அவன்.

அதுவன்றியும் உண்ணத் தன் உண்கலத்தில் வைத்திருந்த மான் இறைச்சியையும், கொக்கின் நகம் போன்ற சோற்றையும் எம் சுற்றத்தினர் உண்ணத் தந்தான். தான் அணிந்திருந்த பொன் மாலையுைம், பூந்துகிலையும் எமக்கு அளித்துச் சிறப்புச் செய்தான்.

மதி நிலாக் கரப்ப, வெள்ளி ஏர் தர, வகை மாண் நல் இல் ........................ பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்பப், பொய்கைப் பூ முகை மலரப், பாணர் கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க, இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை, பரிசிலர் வரையாவிரைசெய் பந்தர் வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன், நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப் புலியினம் மடிந்த கல் அளைபோலத் துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர், மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி, இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து, உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்! ‘தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என என் வரவு அறிஇச், சிறிதிற்குப் பெரிது உவந்து, விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத் துரும்பு படு சிதாஅர் நீக்கித் தன் அரைப் புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ அழல் கான்றன்ன அரும் பெறல் மண்டை, நிழல் காண் தேறல் நிறைய வாக்கி,