பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

407



மண்டைய கண்ட மான் வறைக் கருனை,

கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர,

வரை உறழ் மார்பின், வையகம் விளக்கும், விரவு மணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு, புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம் உரை செல அருளியோனே பறை இசை யருவிப் பாயல் கோவே.

திணை - பாடான் திணை, துறை - கடை நிலை.

சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.

399. தாமான் தோன்றிக்கோன்

உணவு படைக்கும் மகள் வெண்ணெல்லை உலக்கையில் குற்றி அரிசி ஆக்கினாள்: மாவின் கனி பிசைந்து புளிக்குழம்பு ஆக்கினாள் வரால் மீனை வறுத்து வைத்தாள், வயல்களில் படர்ந்த வள்ளைக் கீரையும் பாகற் காயும் தனித்தனியே இவற்றைப் புழுக்க வைத்துத் தந்தாள்; இந்தக் கலவை உணவைக் களமர் மகிழ்ந்து உண்டனர். இவற்றோடு கள்ளையும் குடித்து மயங்கிக் கிடப்பர். காலையில் எழுந்து பழஞ்சோறு உண்பர். இத்தகைய உழவர் வதிக்கும் வயல் வளம் மிக்க காவிரி நாட்டிற்குத் தலைவன் கிள்ளி வளவன். அவன் நற்புகழை நினைத்துக் கொண்டு அவனை நோக்கிச் சென்றோம். பிறர் முகத்தை யாம் பார்ப்பது இல்லை என்ற உறுதியோடு வாழ்கிறோம்.

தூண்டிலில் பிடித்துக் கொணர்ந்த மீனை விற்றுப் பாகற்புளிங் கூழ்ச் சோறு வேளை மறுத்து உண்டு வந்தேன். சரியான உணவு இன்றி நெஞ்சு அழிந்து ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடந்தேன்.

அவ்வாறு இருந்த எனக்குக் கிள்ளியின் உயர் புகழை ஒரு சிலர் எடுத்து உரைத்தனர். ‘அறவோருள் சிறந்த அறவோன்; மறவோருள் சிறந்தவன்; பழைமையோரின் வழித்தோன்றல்; தாமான் தோன்றிக்கோன். புகழ்மிக்கவன்; அவனை நாடிச் செல்க; நயந்து தருவான்’ என்று உரைத்தனர்.