பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



அவ்வளவுதான் அறுந்த தடாரியைச் சரி செய்து கொண்டு அதற்குப் புதுப் போர்வை மாட்டிக் கொண்டு, மாலை சூட்டிக் கொண்டு புறப்பட்டேன். தெய்வ வழிபாடு செய்து கொண்டிருந்

தால் காலம் தாழ்த்தும் என்பதால் அவனைச் சென்று அடைந்த யான் வண்டியில் பூட்ட வலிய எருது ஒன்று தருக என்றுதான் கேட்டேன்.

அவ்வளவுதான் பசுநிரைகள்; அவற்றோடு எருதுகள் பலவற்றைக் கொண்டு செல்லத் தந்தான். அருவிகள் மிக்க மலை நாட்டுக்குத் தலைவன் தோன்றிக்கோ இது யான் பெற்ற சிறப்பு.

அடு மகள் முகந்த அளவா வெண்ணெல் தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி காடி வெள் உலைக் கொளிஇ, நீழல் ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி, மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை, செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல், பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன மெய் களைந்து, இனனொடு விரைஇ................. மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல், அழிகளின் படுநர் களி அட வைகின், பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன், மாயா நல்இசைக் கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்; செல்லேன் செல்லேன், பிறர்முகம் நோக்கேன்; நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து, கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு, ஒரு சிறை இருந்தேன்; என்னே! இனியே, அறவர் அறவன், மறவர் மறவன், மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன் இசையின் கொண்டான், நசை அமுது உண்க என, மீப் படர்ந்து இறந்து, வன்கோல் மண்ணி வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை விசிப்புறத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை, அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக், கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன், ‘கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவற்