பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

409



பகடே அத்தை யான் வேண்டி வந்தது என, ஒன்று யான் பெட்டா அளவை, அன்றே, ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின் மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை ஊர்தியொடு நல்கியோனே சீர் கொள இழுமென இழிதரும் அருவி, வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே.

திணை - அது துறை - பரிசில் விடை

தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.

400. சோழன் நலங்கிள்ளி

கடல் நடுவே முழு நிலாவினைக் காண்பது போன்ற என் தடாரிப் பறையை ஒலித்து அவன் புகழைப் பாடினேன்.

விடியற்காலையில் பிறர் துயில தான் மட்டும் துயிலாது இருந்தவன் என் தடாரிப் பறை ஒலி கேட்டுக் கேட்ட அளவில் என்னை வந்து அணுகி என் பழைய கந்தல் ஆடையை மாற்றிப் புதிய ஆடை உடுத்துக் கொள்ள அளித்தான். பொலிவுமிக்க பொன் ஆபரணங்கள் பலவும் தந்தான். வீறு அமைந்த நல்ல கள்ளையும் பருகத் தந்தான்.

அங்குப் பொழுது போனதே தெரியாமல் அவனுடன் பழகினேன்; அவன் ஊரில் தங்கினேன்; அவன் தன் பகைவரை எதிர்த்துப் பகைவரைக் கடிந்தான். அது அவன் வீரத்தின் விளைவு: பசித்தவர் துன்பத்தைக் களைந்தான்; அது அவன் கொடைத் திறனாக விளங்கியது.

அவன் போர்களில் வெற்றி பெற்றுக் கள வேள்விகள் பல கண்டான். நாட்டில் அந்தணர் காட்டிய வழி நின்று அறவேள்வி களை நடத்தித் தூண்களையும் நிறுவினான். கடலில் செல்லும் கலங்கள் துண்றகள்தோறும் பிணிக்கும் சிறப்பு உடைய வளம் மிக்க ஊர்களை உடையவனாய் விளங்கினான். வளம் மிக்க நாட்டை

உடையவனாகத் திகழ்ந்தான்.

மாக விசும்பின் வெண் திங்கள் மூஐந்தான் முறை முற்றக்,