பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

41



17. சேரமான் யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

தெற்கே குமரி வடக்கே இமயம் இவ்வெல்லைக்குட்பட்ட நாட்டை உன் முன்னோர் ஆண்டனர். அரசர்கள் அவர்களுக்கு அடிபணிந்து வழி மொழிந்தனர். தீமைகளை அகற்றியும், நன்மைகளை நிலைநிறுத்தியும் நல்லாட்சி செய்தனர். விதித்தது பெற்றுக் குடிகளை வருத்தாமல் ஆட்சி செய்தனர். அவர்கள் வழிவந்த காவலன் நீ!

தொண்டி என்னும் ஊரார் மதிக்கும் காவல் வேந்தன் நீ அது தென்னை மரங்களையும், அகன்ற வயல்களையும் பெற்று உள்ளது. மலைகள் சூழ்ந்த நாடு அது மணல் பரப்பு உடைய கழிக்கானலில் பல்வகைப் பூக்கள் அழகு தருகின்றன. அத்தகைய நகர் தொண்டி, அதன் காவலன் நீ!

நீ பகைவர்பால் சிறைப்பட்டுத் தப்பித்து வந்தாய்; அது மறக்கமுடியாத நிகழ்ச்சியாகும். குழியில் அகப்பட்ட பெருங் களிறு ஒன்று அதைத் தூர்த்துவிட்டு வெளியேறித் தன் இன யானைகளோடு சேர்வதைப் போல் நீ தப்பித்து வந்தாய். உன் சுற்றத்தோடு இனிது ஆட்சி செய்கிறாய்.

அதனைக் கேட்டு மகிழ்வாரும் உளர். அஞ்சி நடுங்குபவரும் உள்ளனர். உன்பால் இழந்த நாட்டையும், பொன் ஆபரணங் களையும் கேட்டுத் திரும்பப் பெற முடியும் என்ற நம்பிக்கையால் மகிழ்பவர் உளர். நீ சினந்து நோக்கினால் தங்கள் நாடும் ஆட்சி யும் இழந்து விடுவோம் என்று அஞ்சிக் கவலை உறுபவரும் உளர், கடல் பெருஞ்சேனை உடைய நீ வெற்றிச் சிறப்பும் ஈகையும் மிக்கவன். சேரர்தம் அரசே இத்தகு சிறப்புகளை எண்ணி உன்னைப் புகழ்ந்து ஏத்தி உன்னைக் காண வந்தோம் யாம்.

தென் குமரி, வட பெருங்கல்,

குண குட கடலா எல்லை,

குன்று, மலை, காடு, நாடு,

ஒன்று பட்டு வழிமொழியக்

கொடிது கடிந்து, கோல் திருத்திப்

படுவது உண்டு, பகல் ஆற்றி,