பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

43



18. பாண்டியன் தலையாலங்கானத்துச்

செருவென்ற நெடுஞ்செழியன்

தனிப் பேரரசராக விளங்கும் புகழை நிலைநாட்டியவர்கள் உன் முன்னோர்கள். நீ பல காலம் நீடுழி வாழ்க!

காஞ்சிப் பூவைக் கதுவும் வாளை மீனும், வரால் மீனும், கெடிற்று மீனும் உடைய ஆழமான அகழியையும், வான் அளாவிய நீள் மதிலையும் உடைய வளம் மிக்க மூதூரின் பேரரசன்

நீ.

மேல் உலகத்துத் துறக்க வாழ்வு வேண்டினாலும், இவ் உலகத்திலேயே பேரரசனாகத் திகழ வேண்டும் என்றாலும், புகழை நிலைநாட்டி உயர்வு பெற வேண்டும் என்றாலும் அவற்றிற்குச் சில தகுதிகள் உள்ளன.

நீர் இல்லை என்றால் மக்கள் உயிர் வாழ இயலாது. நீரைக் கொண்டுதான் உணவைப் படைக்க இயலும். நீரும் நிலமும் சேரும் சேர்க்கையால் தான் உணவு உண்டாகிறது. உணவு தருவார் உயிர் கொடுப்பவர் ஆவர்.

மழை நீரையே நம்பி வாழும் பயிர்கள் செழிப்பது இல்லை; மழை நீரைத் தேக்கிக் கட்டுப்படுத்தி அணைகள் இட்டுத் தளைப்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.

வெறும் நிலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? நீரைத் தேக்கித் தளைப்படுத்தினால்தான் வாழ்வில் செழுமை காண முடியும். அவர்களே சாதனை படைத்தவர் ஆவர். ஏனையோர் புறக்கணிக்கப்படுவர். அவர்கள் பெயர் நிலைத்து இருக்காது.

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியல் ஞாலம் தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்! ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய பெருமைத்தாக, நின் ஆயுள்தானே! நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்