பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



பூக் கதூஉம் இன வாளை, நுண் ஆரல், பரு வரால், குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி: வான் உட்கும் வடி நீள் மதில்; மல்லல் மூதூர் வய வேந்தே! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி, ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன் தகுதி கேள், இனி, மிகுதியாள! நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே, உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே, வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன் வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே; அதனால், அடு போர்ச் செழிய! இகழாது வல்லே நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத் தட்டோர் அம்ம, இவண் தட்டோரே, தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.

திணை - பொதுவியல் துறை - முதுமொழிக் காஞ்சி. பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.

19. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

தலையாலங்கானத்துப் போரில் தமிழ் மன்னர்கள் வந்து எதிர்த்தனர். பெருநிலமன்னர் இருவர் குறுநில மன்னர் ஐவர்.

நீ ஒருவனாக இருந்து கூற்றுவனைப் போல எதிரிகளை மாய்த்தாய். உன் படை வீரர்கள் எதிரிகளின் யானைகளை

அம்புகளை ஏவிப் புண்படுத்தினர். அவை குன்றத்தில் தங்கும் குருவிக் கூட்டம்போல் சென்று பதிந்தன. அவற்றை வெட்டி