பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

45


வீழ்த்தினர்; அவ் யானைகளின் துதிக்கைகள் துணிபட்டுத் தரையில் கிடந்தன. வாயொடு அத் துதிக்கைகள் விழுந்தன. அவை கலப்பை போல் இருந்தன.

களிறுகளை எறிந்து உனக்காகப் போர் செய்த வீரர்கள் பலர் உயிர் இழந்தனர். அவர்தம் உடல் துணிபட்டு அவை சிதைவு பெற்றுள்ளன.

அவற்றைக் கண்டு அவர்தம் தாய்மார்கள் உவகைக் கண்ணிர் விட்டனர். கூற்றுவனும் நாணி அவர்கள்பால் இரக்கம் காட்டினான்.

அவ் ஏழு மன்னரைக் கொன்று நீ பெற்ற வெற்றி என்னை அளவற்ற மகிழ்வில் ஆழ்த்துகிறது. உன் வீர மார்பினைத் தழுவி மகிழ்வு கொள்ள விரும்புகிறேன்.

புலியைப் பிடிக்க வைக்கப்படும் கற்சிறை போன்றது உன் வலிமை மிக்க மார்பு என மதித்து அதனைத் தழுவி யான் மகிழ்வு கொண்டேன்.

இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கைத், தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து, மன் உயிர்ப் பன்மையும், கூற்றுத்து ஒருமையும், நின்னொடு தூக்கிய வென் வேற் செழிய! ‘இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய பெருங் கல் அடாரும் போன்ம்’ என விரும்பி, முயங்கினேன் அல்லனோ, யானே - மயங்கிக் குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல, அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத் தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து, நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள, எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்; ‘இன்ன விறலும் உளகொல், நமக்கு? என, மூதிற் பெண்டிர் கசிந்து அழ, நாணிக் கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை, எழுவர் நல் வலம் கடந்தோய்! நின் கழுஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?

திணை - வாகை துறை - அரச வாகை,

அவனை அவர் பாடியது.