பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



20. சேரமான் யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

ஆழநீர்க் கடலையும், நீண்ட நிலப்பரப்பையும் காற்று, இயங்கும் திசைகளையும், வெற்று இடம் ஆகிய ஆகாயத்தையும் அளந்து அறியவும் செய்யலாம். ஆனால் உன் அறிவையும், அன்பின் திறத்தையும், இரக்க உணர்வையும் அளக்க இயலாது.

நின் குடிமக்கள் அடுப்பு எரிவிக்கும் தீ, சூரியனின் வெப்பம் ஆகிய இவற்றைத்தாம் அறிவர். மற்று எந்தக் கொடுமையையும் அவர்கள் அறியமாட்டார்கள்.

வில் என்றால் அவர்கள் அறிவது வானவில்தான். கொலை செய்யும் வில் அதனை அவர்கள் கண்டது இல்லை. பகைவர்கள் போர் தொடுத்து அவர்கள் கண்டது இல்லை.

ஏர் உழும் கலப்பையை மட்டும் அறிந்துள்ளனர். மற்றும் பகைவர் தம் படைக்கலம் யாதும் அவர்கள் அறிந்தது இல்லை.

நீ பிறர் மண்ணைக் கவர்ந்து உள்ளாய்; பிற நாட்டினர் உன் நாட்டில் அடி எடுத்து வைத்ததும் இல்லை. உன் நாட்டு வயவுறு மகளிர்தாம் உன் மண்ணை உண்பர்; பகைவர் மண்ணைத் தொட்டது இல்லை. -

வீரம் அதன் அறிகுறியாக உன் அரண்களில் அம்புகள் வைக்கப்பட்டுள்ளன. அறம் அது உன் செங்கோலில் காண முடிகிறது.

புதுப் பறவைகள் வருதலும், பழைய பறவைகள் வெளி யேறிச் செல்லுதலும் நிகழலாம். கால மாற்றம்; அதனால் எந்தக் கேடும் உன் நாட்டில் நிகழாவண்ணம் நீ காத்தல் செய்கிறாய்.

நாட்டு மக்கள் நின்பால் நேசம் காட்டுவர். உன் நல் வாழ்வுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.

இரு முந்நீர்க் குட்டமும்,

வியல் ஞாலத்து அகலமும்,

வளி வழங்கு திசையும்,

வறிது நிலைஇய காயமும், என்றாங்கு

அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை,