பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

47



அறிவும், ஈரமும், பெருங் கண்ணோட்டமும்: சோறு படுக்கும் தீயோடு செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது பிறிது தெறல் அறியார், நின் நிழல் வாழ்வோரே, திருவில் அல்லது கொலை வில் அறியார், நாஞ்சில் அல்லது படையும் அறியார்; திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய, அப் பிறர் மண் உண்ணும் செமமல் நின் நாட்டு

வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது, பகைவர் உண்ணா அரு மண்ணினையே; அம்பு துஞ்சும் கடி அரணால், அறம் துஞ்சும் செங்கோலையே; புதுப் புள் வரினும், பழம் புள் போகினும், விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை, அனையை ஆகன்மாறே, மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே.

திணையும் துறையும் அவை,

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.

21. கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

புலவர் நாவுக்கு எட்டாத புகழ்படைத்தவன் நீ! கானப் பேரெயிலை நீ கைப்பற்றியுள்ளாய். அது ஆழமான அகழியையும், உயரமான மதிலையும், அம்பு எய்யும் அறைகளையும், அடர்த்தி யான காவல் காடுகளையும் உடையது. மற்றும் அதனைச் சுற்றிப் படை வீடுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வளவு அரண்கள் இருந்தும் அப்பேரெயிலை நீ வேங்கை மார்பனிடமிருந்து அகப்படு த்திக் கொண்டாய்.

இனி அவனால் அதனைத் திரும்பிப் பெற இயலாது. கொல்லன் காய்ச்சும் இரும்பில் அவன் சொரியும் நீர் மீட்டற்கு அரிது. அது போன்ற நிலைதான் இது என்பதை அவன் அறிந்துள் ளான். அதற்காக அவன் பெரிதும் வருந்துகின்றவன் ஆகின்றான்.