பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


புலவர்கள் நாளும் உன் வெற்றிகளைச் சிறப்பித்துப்

பாடுவர். உன்னை இகழ்பவர் உன்னோடு மோதி அழிவர். நீ வெற்றிகள் பெறுக! உன்வேல் பொலிவு பெற்றுச் சிறப்பதாக

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்! நில் வரை இறந்த குண்டு கண் அகழி, வான் தோய்வு அன்ன புரிசை, விசும்பின் மீன் பூத்தன்ன உருவ ஞாயில், கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை, அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், கருங்கைக் கொல்லன் செந் தீ மாட்டிய, இரும்பு உண் நீரினும், மீட்டற்கு அரிது என, வேங்கை மார்பன் இரங்க வைகலும் ஆடு கொளக் குழைந்த தும்பைப் புலவர் பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே! இகழுநர் இசையொடு மாயப் புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!

திணையும் துறையும் அவை. கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங் கிழார் பாடியது.

22. சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

போரை முடித்துப் பாசறையில் வெற்றிவிழா எடுக்கிறாய். உன் யானைகள் போர் இன்றிக் கட்டுத் தறியில் அசைந்து கொண்டு இருக்கின்றன. வீரர்கள் வாளை எடுத்து வைத்துவிட்டு உறங்கு கின்றனர்; வீரர்கள் வேறுவேறாகக் கூரைகள் உடைய பாடி வீடுகளில் தங்கி உள்ளனர். அவர்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் குரவை எடுத்து ஆரவாரம் செய்கின்றனர்.

போர் செய்து பகைவர் நாட்டில் இருந்து கொண்டு வந்த பொருளை உன்னை நாடிவரும் இரவலர்க்கு வாரி வழங்குகிறாய். பாசறையில் அவர்களுக்கு வேண்டும் சிறப்புகளைச் செய்கிறாய்.

கொல்லி என்னும் ஊருக்குத் தலைவனே! நின் செல்வம் அளவற்றது; உன்னைப் பாடும் புலவர்க்கு வாரி வழங்குகிறாய்;