பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்! வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே, நின் பாடிய அலங்கு செந்நாப் பின் பிறர் இசை நுவலாமை, ஒம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! “மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு வந்து, இனிது கண்டிசின், பெரும! முனிவு இலை, வேறு புலத்து இறுக்கும் தானையொடு! சோறு பட நடத்தி-நீ துஞ்சாய்மாறே!

திணையும் துறையும் அவை துறை - இயன்மொழியும் ஆம். சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.

23. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

‘களிறுகள் நீர்த்துறைகளைக் கலக்கின; முருகனது கூனிகள் போலச் சீற்றம் மிக்க வீரர்கள் கழனிகளில் புகுந்து கொள்ளை அடித்தனர். அவர்கள் காவல் மரத்தினை வெட்டிச் சிதைத்தனர்; எரியிட்டு ஊரைக் கொளுத்தினர். அழிவுகள் பலவும் செய்துள்ள னர். இன்னும் இவற்றைப் போல் அழிவுகளைச் செய்வர் உன் வீரர்கள்; துணிவு மிக்கவன் நீ என்று யாவரும் அஞ்சும்படி படைகளைக் கொண்டு தலையாலங் கானத்தில் போர் செய்து வென்றனை கூற்றுவன் அனைய ஆற்றல் உடைய உன்னைக் காண வந்துள்ளேன்.

மருப்பு அறுபட்ட ஆண்மான் அது புலியின் தாக்குதலால் அதற்கு இரையாகிறது. அதனைக் கண்டு இனி இங்கு வாழக் கூடாது என்பதால் உயிர் தப்பத் தன் குட்டியோடு பெண் மான் தெறிக்கத் தெறிக்க ஒடிப் பூளைச் செடி நீடிய பாழிடத்துக்குச் செல்கிறது. அங்கே வேளைச் செடியில் வெண் பூவைக் கறிக்கிறது. அத்தகைய ஆள் வழக்கு அற்ற காட்டு வழியைக் கடந்து யான் வந்திருக்கிறேன்.