பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

51


வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇக்
களிறு படிந்து உண்டெனக் கலங்கிய துறையும்;
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்:
வடி நவில் நவியம் பாய்தலின்,
ஊர்தொறும் கடிமரம் துளங்கிய காவும் நெடுநகர்
வினை புனை நல்இல் வெவ் எரி நைப்ப,
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று,
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன் என,
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப நிற் கண்டனென் வருவல்
அறு மருப்பு எழிற் கலை புலிப்பால் பட்டெனச்
சிறு மறி தமீஇய தெறிநடை மடப் பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூக் கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே.
திணையும் துறையும் அவை: துறை - நல்லிசை வஞ்சியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

24. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்

நெற் கதிர்களை அரியும் உழவர்கள் வெய்யிலை வெறுத்தால் கடலில் பாய்ந்து ஆடுவர். பரதவர்கள் கள் குடித்துவிட்டுக் குரவை ஆடி மகிழ்வர். இளைஞர்கள் புன்னை மலர் பறித்து அவற்றைச் சூடிக் கொண்டு கன்னி இளம் பெண்டிரோடு கைகோத்து மகிழ்வர். பெண்கள் பனம்துங்கு நீர், தென்னை இளநீர், கருப்பஞ்சாறு இவற்றைப் பருகிப் பின்