பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


கடலில் பாய்ந்து விளையாடுவர். இத்தகைய மகிழ்வுமிக்க நல்லூர்கள் கொண்டது மிழலைக் கூற்றம். அது எவ்வி என்பானுக்கு உரியது. அதனையும் வேளிர்கள் ஆண்ட முத்துாறு என்னும் கூற்றம் இவை இரண்டையும் வெற்றி கொண்டவன் நீ!

புகழ்மிக்க வாழ்வு உனக்கு அமைவதாக வீரர்கள் உன்தாளினை வாழ்த்தவும், மகளிர் பொன் கலத்தில் கள்வார்த்துக் கொடுக்க அதனைப் பருகி இன்புற்றும் வாழ்வாயாக இரவலர்க்கு ஈந்து நற்புகழ் பெறுக. பீடும் பெருமையும் மிக்க வாழ்வு உனது; இது மதிக்கப்படுவது ஆகும்; வாழ்க்கை என்பது புகழொடு வாழ்வது ஆகும். மற்றையோர் வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்ந்தவர் என்று மதிக்கப்படமாட்டார்கள்.

நெல் அரியும் இருந் தொழுவர்

செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,

தெண் கடல் திரை மிசைப் பாயுந்து,

திண் திமில் வன் பரதவர்

வெப்பு உடைய மட்டு உண்டு,

தண் குரவைச் சீர் தூங்குந்து;

தூவற் கலித்த தேம் பாய் புன்னை

மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்

எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து

வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல்

முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர்

இரும் பனையின் குரும்பை நீரும்,

பூங் கரும்பின் தீம் சாறும்,

ஓங்கு மணற் குவவுத் தாழைத்

தீம் நீரோடு உடன் விரா அய்,

முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்

தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய

ஒம்பா ஈகை மா வேள் எவ்வி

புனல் அம் புதவின் மிழலையொடு - கழனிக்

கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்,

பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர்,

குப்பை நெல்லின், முத்துறு தந்த

கொற்ற நீள் குடைக் கொடித் தேர்ச் செழிய!

நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது