பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#

53 படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனேநின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு நின்று மூத்த யாக்கை அன்ன, நின் ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, இரவல் மாக்கள் ஈகை நுவல’ ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! ஆங்கு அது வல்லுநர் வாழ்ந்தோர் என்ப- தொல் இசை, மலர் தலை உலகத்துத் தோன்றிப் பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே, திணை - பொதுவியல், துறை - பொருண்மொழிக் காஞ்சி. அவனை மாங்குடி கிழார் பாடியது.

25. பாண்டியன் தலையாலங்கானத்துச்

செருவென்ற நெடுஞ்செழியன்

வானத்து இயங்கும் ஞாயிறும் திங்களும் ஒன்று சேர்ந்து

நிலத்தின்கண் வருவதுபோல் இணைந்த சோழனையும் சேரனையும் எதிர்த்துப் போர்க்களத்தில் வீழ்த்தினாய்; அவர்கள் தம் முரசினைக் கைக் கொண்டாய்.

இப்போரில் இறந்துபட்ட வீரர்கள் அவர்களை இழந்த

மகளிர் கைம்மை ஏற்றுக் கதறி அழுத அழுகையும், தலைமுடி களைந்த கைம்மைநிலையும் உன்னை மாற்றிவிட்டன. அதனால் மேலும் தொடராமல் போரை நிறுத்தி உள்ளாய்; இரக்க உணர்வு உன்னைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு, நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தா அங்கு, உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணிப் பிணியுறு முரசம் கொண்ட காலை,