பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



நிலை திரிபு எறியத் திண் மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல்-செழிய!முலை பொலி ஆகம் உருப்ப நூறி, மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல் ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர, அவிர் அறல் கடுக்கும் அம் மென் குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே.

திணை வாகை துறை - அரச வாகை.

அவனைக் கல்லாடனார் பாடியது.

26. பாண்டியன் தலையாலங்கானத்துச்

செருவென்ற நெடுஞ்செழியன்

காற்றுக்கு அசையும் மரக்கலம் நீரைக் கிழித்துச் செல்வதைப் போல் உன் யானைகள் களம் சென்று வீரர்களை ஒடச் செய்தன. பகை அரசர்களை நீ வெற்றி கொண்டு அவர்கள் முரசினைக் கைக் கொண்டாய்; மற்றும் அவர்கள் தலைகளை அடுப்பாகவும், குருதியைப் புனலாகவும் உலையேற்றித் தசையையும், மூளையை யும் அரிசியாக இட்டு அவர்கள் தோள்களைத் துடுப்பாகக் கொண்டு துழாவிக் கள வேள்வி செய்தனை.

போரில் வெற்றி கண்ட செழியனே நகரின்கண் வேதியர் களைக் கொண்டு அவர்கள் தலைமையில் யாகவேள்விகள் நடத்தினை; தோற்ற அரசர்கள் ஏவல் செய்தனர். வேள்வி பல செய்து முற்றுவித்தாய்.

வேள்வி முற்றிய வேந்தனே! பகைவர்கள் நின்னிடம் தோற்றார்கள்; எனினும் அவர்கள் ஏற்றம் பெற்றவர் ஆயினர். உன்னை எதிர்த்ததால் அவர்கள் உயர்வு பெற்றனர். அவர்களும் பாராட்டப்படுபவர் ஆயினர்.

நளி கடல் இருங் குட்டத்து

வளி புடைத்த கலம் போலக்

களிறு சென்று களன் அகற்றவும்,

களன் அகற்றிய வியல் ஆங்கண்

ஒளிறு இலைய எஃகு ஏந்தி,